இந்த ஐந்து மாதங்களில் முதன் முறையாக முழு நேரம் வீட்டில் நிற்கும் வாய்ப்பு.. கிடைக்காத அருமையான ஒன்றைப் பெற்றுக் கொண்ட சந்தோசம்...
முழு நேர இணைய வசதி வேற...
விடிய விடிய விழித்திருந்தாலும் இருக்கலாம்.. காலைத் தூக்கம் கலையக் கூடாது என்கி்ற ரகம் நான்..
எழுப்பி விடும் தொலைபேசி அலாரத்திடம் இன்னும் கொஞ்ச நேரம்... இன்னும் கொஞ்ச நேரம் என்று கெஞ்சி இனியும் முடியாது என்ற நிலையில் எழும்பி, அவசர அவசரமாய் தயாராகி, அது எங்கே... இது எங்கே என்று அம்மாவைப் போட்டு படுத்தியெடுத்து நான் வேலைக்குப் போக செல்ல வேண்டிய நேரம் கடந்தே விட்டிருக்கும்...
இப்போது அந்தப் பிரச்சினையெல்லாம் இல்லை.. ஏன் என்றால் நான் பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருக்கிறேன்.. :D
இரவிரவாக இணையத்தில் உலாத்தல்...
Really Busy என்று Gtalk, MSN, Yahoo இலும் "I won't be available online much" என்று facebook இலும் message போட்டு விட்டு தொடர்கிறது அரட்டை..
நண்பர்களின் சுவர்க் கிறுக்கல்களுக்கு உடனுக்குடன் பதில் (punctual) ..
விடிவதே தெரியாமல் உறக்கம்...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.. அப்பப்பா ஒழுங்காகத் தொலைக்காட்சி பார்த்து எத்தனை நாட்கள்...
மீண்டும் இணையத்தில் உலாத்தல் என்று இருந்த போது (என் நண்பர்களின் மொழியில் சொன்னால் குப்பை கொட்டிக் கொண்டிருந்த சமயம்) தோழியின் தொலைபேசி அழைப்பு...
"எங்க நிக்கிறாய்"
"வீட்டை.. "
"ஏன் இண்டைக்கு class இல்லையோ"
"இல்லை.. Study leave... இந்தக் கிழமை full ஆக வீட்டை தான் நிற்கப் போகிறேன்.. வேலையும் இல்லை" - சந்தோசத்தில் நான்
"ஓ.. Examaa? எப்ப Exam?"
"அடுத்த கிழமை தான்....
அதை விட்டிட்டு நீ சொல்லு...என்ன விஸயம்*"
"இல்லை.. வீட்டை நிற்கிறாய் என்றால் வீட்டை வருவம் என்று பார்த்தேன்.. புதுசா மாறின வீட்டுக்கு நீ தான் கூப்பிடுகிறாய் இல்லை... நானாக வருவம் என்று நினைச்சன்."
"No problem.. நீ வா.. இண்டைக்கு முழுக்க வீட்டை தான் நிப்பன்"
"இல்லை.. நீ Exam க்குப் படி.. முடிய வாறன்.. "
"சரி.. உன்ர இஸ்டம்*..."
அவள் வைத்து விட்டாள்..
படிக்கிறேன் என்று சொல்லி அவளை வரவிடாமப் பண்ணிட்டேன் என்று மனசாட்சி உறுத்த ஒரு பாடத்தின் ஓர் அலகைப் ஒருவாறாக படித்து முடித்தேன்...
மீண்டும் இணையத்தில் உலாத்தல்... எல்லாம் மேய்ஞ்சு முடிஞ்சு.. அலுப்பாக இருந்தது..தொலைக்காட்சியும் அலுப்படிச்சுது..
கொஞ்சம் நித்திரை கொண்டால் நல்லா இருக்கும் போல இருந்திச்சு.. படுப்பம் என்று படுத்தால் பாழாய்ப் போன பழக்கமில்லாத பகல் நித்திரை வருகுதேயில்லை... (Office இல் என்ன செய்றனீர் என்று யாரும் கேட்க மாட்டீங்க தானே)
ஒரு blog வைச்சிருக்கிறாய்.. அப்பப்போ எதையாவது எழுதினால் என்ன என்று தோன்ற, வந்து இருந்து type செய்து கொண்டிருக்கிறேன்..
கடந்த Sememster களில் மூன்று பேர் சேர்ந்து படிச்சம்.. (தனியவே இப்படியெண்டால் மூன்று பேர் சேர்ந்தால் சொல்லவும் வேணுமோ. )
தான் உண்டு.. தன் பாடுண்டு என்று இருக்கும் தோழியின் அம்மா தவிர நாங்கள் மூவரும் மட்டுமே... அவரும் சில வேளைகளில் வீட்டில் நிற்க மாட்டார்.. சகல வசதிகளுடனும் தனி வீடு... Cable Connection உடன் TV..
பிடிச்ச நிகழ்ச்சிகள் போனால் ஒவ்வொருவராக TV முன்னால் அமர்ந்து விடுவோம்.. ஒருத்தர் எழுந்தாலும் மற்றவரை எழுப்ப முடியாது.. சமயத்தில் DVD இல் புதுப்படம்... தினமும் விதம் விதமாக வெவ்வேறு இடங்களிலிருந்தும் மதிய உணவு.. Delivery Service கொண்டுள்ள உணவகங்களின் list தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என்று விளம்பரம் கூட போடப் பார்த்தோம்.. ஹி.. ஹி.. மதிய உணவை ஒரு கை பிடிச்சால் நித்திராதேவி அழைத்தபடியே இருப்பா...
அதனால் படிக்க முடியாமல் பல கதைகள் விமர்சனங்கள்... விதண்டாவாதங்களுடன் அரட்ட மட்டும் தொடரும். அப்பப்போ சண்டைகளும் வந்து செல்லும்.. இவ்வாறாக கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும்...
ஒரு நாளைக்கு ஒரு அலகு படித்திருந்தாலே பெரிய விஸயம்*..
(பரீட்சைக்கு ஒரு மாத்திற்கு முன்னரேயிருந்து 20 க்கும் மேற்பட்ட என் சக மாணவர்கள் Common Room இல் 2,3 மேசைகளை ஒன்றாக சேர்த்துப போட்டு எப்படி படிக்கிறார்கள் என்பது இன்னும் எனக்குப் புரியாத புதிராகவே இருக்கு.. )
இப்படியாக போனாலும் ஒவ்வொரு பரீட்சைக்கும் முதல் நாள் மட்டும் சமர்த்துப் பிள்ளைகளாக படித்து விடுவோம்...
வழமையை விட குறைந்த பெறுபேறுகள் போன Semester இல் கிடைத்ததால் இனி சேர்ந்து படிப்பதில்லை என்ற முடிவை ஏக மனதாக மூவரும் ஒத்துக் கொண்டு இப்போது தனியே படிக்கிறோம்...
நான் படிக்கும் இலட்சணத்தைத் தான் சொல்லிட்டேனே மேலே..
மற்ற இருவரும் எப்போதும் போலவே..
என்னுடைய பெறுபேறு இப்போதே தெரிந்து விட்டது எனக்கு.. மற்றயவர்களுடையதைப் பார்ப்போம்..
நான் இப்போதும் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. :))
இவர்களும் பரீட்சைக்குப் படிக்கிறார்கள்..