Saturday, September 24, 2005

என் கணித ஆசிரியர்கள்.

பாவையின் பக்கம்

நான் இப்ப கணிதம் படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கிறன். அதால எனக்கு கணிதம் படிப்பிச்சவங்களை சும்மா நினைச்சுப் பார்த்தன்.

எனக்குச் சின்ன வயசில இருந்தே கணித பாடமென்றால் அப்பிடி ஒரு விருப்பம். நிறையப்பேர் மாறித்தான் சொல்லுவினம்.. அவை அப்பிடிச் சொல்லேக்க ஏன் இவைக்கு கணித பாடம் பிடிக்கேறல என்று எனக்குள்ளேயே குழம்பிக் கொள்வேன். நான் அவையை ஏன் உங்களுக்கு பிடிக்கேல என்று ஒருக்காலும் கேட்கேல. என்டாலும் அவையை ஒரு இளக்காரமாத் தான் பார்ப்பன். விவரம் தெரியாத வயசில மட்டுமில்ல இப்பக் கூட என்னால அப்பிடி இளக்காரமாக பாக்கிறதை விட முடியல. (ஆமா.. இப்ப மட்டும் விபரம் தெரியுதாக்கும்..)

ஆரம்பப் பள்ளியில் மூண்டாம் ஆண்டு வரை கணிதத்துக்கெண்டு தனிய ஒருத்தர் இல்லாம எல்லாப் பாடமும் ஒருத்தர் தானே படிப்பிக்கிறது.. அதால அவையை விட்டிடுறன். நாலாம் ஐஞ்சாம் வகுப்பில எனக்கு கணிதம் படிப்பிச்சது ஆறுமுகம் வாத்தியார்.
ஆறுமுகம் வாத்தியாரின்ர பேரைக் கேட்டாலே பெடியளுக்கு உதறும். அப்பிடிப் பொல்லாதவர் என்று பேர் பெற்றவர்.

இந்தப் பதிவு எழுதுறதுககு அவர் சொன்ன ஒரு கருத்துத் தான் முக்கிய காரணம். அது என்னென்டா… இப்பக் கிட்டடியில வந்த A/L results ஐக் கேட்டிட்டு அவர் சொன்னாராம். “ஐஞ்சாம் ஆண்டில என்ன கெட்டிக்காரராக படிச்சதுகளெல்லாம் இப்ப இப்பிடி குறைய எடுத்து வெச்சிருக்குதுகளே” என்று. எனக்கெண்டா கேட்டவுடனேயே சிரிப்பு வந்திட்டு. எங்கட யாழப்பாணத்துப் தாய் தேப்பன்மார் ஓ எல் மட்டும் பெடியள் கெட்டித்தனமாகப் படிச்சவுடனே தங்கட பெடியள் டொக்டர் அல்லது எஞ்சினியராத் தான் வரவேணும் எண்டு Bio அல்லது Maths தான் படிக்க விடுவினம். தாய் தேப்பனைச் சொல்லியென்ன.. பெடியளே அதை விட்டு வேற எதுவும் படிச்சாக் குறைவு என்டு தான் நினைக்குதுகள். (நானும் அப்பிடித் தான் நினைச்சன். அதோட நான் பெரிய Maths காய் என்ற நினைப்பு வேற. படிக்க நினைக்கிறது தப்பில்லை. கஷ்டப்பட்டு படிக்கிறவர்களால மட்டும் தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியும் என்றதை மனசில வைச்சுப் படிக்க வேணுமே)

ஆறுமுகம் வாத்தியாரின்ர நுள்ளுத்தான் ரொம்ப பேமஸ். எனக்குத்தான் அவரிட்ட நுள்ளு வாங்க குடுத்து வைக்கல. ஆனாலும் ஒரே ஒருக்கா அடி வாங்கக் கிடைச்சுது. கொஞ்ச நாள் ஸ்கொலர்சிப் வகுப்பெண்டு பின்னேர வகுப்பு வைச்சவர். அதுக்கெண்டு வேற கொப்பி. ஒருநாள் வீட்டுவேலை (அதாங்க home work) தந்து விட்டவராம். எனக்கு அந்த வீட்டுவேலை தந்து விட்டதும் தெரியாது.. கொப்பியும் கொண்டு போகல.. வழமையாக முன்னுக்கு இருக்கிறதால என்னிட்டத் தான் உதைப்பற்றின விசாரிப்பெல்லாம் நடக்கும். அண்டைக்கும் நான் முன்னுக்கு இருக்கிறன். கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு கேட்டார். நானும் பாக்குக்குள்ள தேடித் தேடிப் பார்க்கிறன் கொப்பியைக் காணல.. கடைசி வகுப்பில என்ன செய்ததெண்டு ஞாபகமும் வருதில்ல. அதுக்குள்ள பின்னுக்கிருந்து ஒண்டு சொல்லிட்டுது... அப்பாடா.. தப்பிட்டன்.. என்று ஆறுதல் அடைய முதல்.. பின்னுக்கிருந்தது "சேர்.... கோம் வேர்க் இருக்கு..." அப்பிடி என்டிச்சு...


எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல. என்னைத் தான் முதல்ல பார்க்க போறார்.

---------------
எடு கொப்பியை..

சேர் கொப்பி கொண்டு வரல...

என்ன கொப்பி கொண்டு வரலையோ... பின்ன என்னத்துக்கு வந்தனி... etc

இல்லை சேர்...

எனக்கு ஒரு சாட்டும் வேண்டாம்.. டேய் இரண்டு தடி முறிச்சிட்டு வா...

ஒருத்தன் போறான். திரும்ப வரேக்க நல்ல நீளமா கையில பச்சைப் ப10வரசு. அதுக்கு முதல் ஒருநாளும் அடி வாங்கினதுமில்லை. அடி வாங்கிறதுகளை இளக்காரமாப் பாக்கிறதோட சரி.
எனக்கு அடி விழப் போகுது. எவ்வளவு கேவலம்... சரி.. விழுறது தான் விழுது... என்ன நோ நொந்தாலும் அழக் கூடாது.. இப்பிடில்லாம் நினைச்சுக் கொள்றன்.

அம்மா இப்பவும் சொல்லுவா.. உனக்குச் சின்னனிலேயே சரியான திமிர் என்டு.

இரண்டு பச்சைத் தடியையும் எடுத்துகொண்டு கையை நீட்டச் சொல்றார்... நீட்டினன்.. நோவண்டா அப்பிடி ஒரு நோ.. என்டாலும் வழமையா மற்றவை செய்யிற மாதிரி கையை பின்னுக்கு இழுக்கவும் இல்லை... அழவும் இல்லை... அந்தக் கோபமோ என்னவே இரண்டு அடியோட நிப்பாட்டுறவர் அண்டைக்கு 5..6 அடி.. பச்சைப் ப10வரசால அடி வாங்கினவங்களுக்கு தெரியும் அந்த வலி.. அப்பப்பா..

மனசுக்குள்ள கறுவிக் கொள்றன். என்னட்டத் தானே வருவாய் மாக்ஸ் பதிஞ்சு தரச் சொல்லி.. அப்ப கவனிக்கிறன் பார்...

அப்பிடி நினைக்கிறதில ஒரு சந்தோஷம். மற்றபடி
என்னால கவனிக்கத் தான் முடியுமா? பதிஞ்சு தா என்றால் பதிஞ்சு குடுக்கத்தானே வேணும்.

அந்த நேரமே யாழ்ப்பாண ரிய10சன் கலாசாரத்துக்கு ஏற்றபடி அம்மா அனுப்பி வைச்ச ரிய10சனில் படிப்பிச்ச நவமணி ரீச்சர்...,

வள்ளி வரப் போறா... அவ துள்ளி வரப் போறா என்று கடுகடுவென இருக்கிற வள்ளி ரீச்சருக்கு பாடினது... அவக்குத் தெரியாமல் தான் பாட முடியும் (தெரிஞ்சாச் சம்பல் எல்லோ)

அதுக்குப் பிறகு,
ஆறாம் ஏழாம் ஆண்டுகளில வன்னியில படிப்பிச்ச ஜெயகாந்தன் சேர் யாழ்ப்பாணம் திரும்பப் போக முதல் கடைசியா நான் போன வகுப்பில 58 மாக்ஸ் எடுத்ததுக்கு பேசினது.... (அதுக்குப் பிறகு A/Level இல் எடுத்த மாக்N)hட ஒப்பிடக்கே இது எத்தனையோ மடங்கு மேல)

வெறும் பேப்பர் சாப்பிடுவதைப் பார்த்து பெற்றோர் சந்திப்பில் வைக்கோல் வாங்கி குடுக்கச் சொன்ன தங்கேஸ் ரீச்சர்...

நல்லாப் படிக்கிறவங்கள தவிர மற்றவர்களுக்கு வில்லனாக தோன்றும் குட்டு புகழ் தங்கப்பா...

கொஞ்சம் வளர்ந்த பிறகு... கொழும்பில படிப்பிச்ச ஜெயக்குமார் மிஸ்ஸிட பேரைச் சொல்லி கண்டீனில் சாப்பாடு வாங்கிறது...

கணிதம் என்றால் பிடிக்காத எனக்கு கணிதம் படிப்பிக்க வேண்டிய நிலைமை வந்திருக்கு... எதை வெறுக்கிறமோ அது தான் எங்களுக்கு கிடைக்கும் என்று சொல்ற தனுஜா மிஸ்ஸ}க்கு தேற்றம் செய்யவே தெரியாது என்று தெரிஞ்சு வெச்சுக் கொண்டு... வேண்டுமென்றே எங்களுக்கு நல்லாத் தெரிஞ்ச தேற்றக் கணக்குகளை சந்தேகம் என்று கேட்டு அவவைக் குழப்பி பாடத்தை நடத்த விடாமல் அரட்டை அடிச்சுக் கொண்டு இருந்தது...

(இதே இதை A/L இல் Physics ரீச்சருக்கும் செய்து பார்த்தம்.. ஒரே ஒரு நாள் தான் சரி வந்திச்சு.. அதுக்குப் பிறகு.. தெரியேல.. நான் பார்த்திட்டு வந்து நாளைக்குச் சொல்றன் என்டிட்டு படிப்பிக்கத் தொடங்கிட்டா.. L)

அதிகாரம் மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் பெரும்பாலான கணித ஆசிரியர்களிற்கிடையே பண்பாக அன்பாகப் பழகும் சுந்தரலிங்கம் சேர்...

நல்லா வளர்ந்த பிறகு(அதாங்க A/Level) தனுஜா மிஸ் மாதிரியே நாங்க வெறுக்கிறது தான் எங்களுக்குக் கிடைக்கும் என்றதை பெண்களை வெறுக்கிற தனக்கு பெண்கள் பாடசாலையில் படிப்பிக்கக் கிடைத்ததோட பிறந்த பிள்ளைகள் மூன்றும பெண் பிள்ளைகளாவே பிறந்து உணர்த்திட்டுது என்று சொல்லும் பிரேம்நாத் சேர்..

இப்படியாக என் கணித ஆசிரியர்களும் அவர்கள் சம்பந்தப்பட்ட சில சம்பவங்களும் அவ்வப்போது நினைவில வந்திட்டுப் போகுது.

அவர்கள் மேல் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நிறைய அப்பிடியே மனசில பதிஞ்ச போயிருக்கு. என்றாலும் கணிதத்தையும் வெறுக்கேல... கணிதம் படிப்பிச்சவங்களையும் வெறுக்கேல..

14 comments:

said...

நன்றி தமிழினி. சேர்த்தாகி விட்டாச்சு

said...

வாங்க பாவை. நல்லா எழுதியிருக்கிறியள்.

-மதி

said...

உங்கள் எழுத்து நடை அழகாக உள்ளது. சென்னைத்தமிழ் பழகிய எனக்கு படிக்க கொஞ்சம் சிரமமாக உள்ளது.

said...

நன்றி அனைவருக்கும்.

Chameleon

எனது தமிழ் எந்தத் தமிழ் என்பதில் எனக்கே குழப்பமாக உள்ளது. யாழ்ப்பாணத் தமிழே எனது தமிழாக இருந்தாலும் இப்ப இப்ப மலையகத் தமிழ், (இந்தியர்களாக இருந்தாலும் இந்தியத் தமிழை விட இவர்கள் பேசுவது வித்தியாசமே).. இந்தியத் தமிழ், முஸ்லிம் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், இவற்றின் சேர்வையான கொழும்புத் தமிழ், நையாண்டிக்காக பழகிய ஐயர் பாஷை இன்னபிறவும் கலந்து தான் கதைக்கிறேன்.

சும்மா ஒரு குறிப்புக்கு: ஒரிஜினல் யாழ்ப்பாணத்துத் தமிழை இப்ப யாழ்ப்பாணத்திலேயே கேட்க முடிவதில்லை. நீண்ட காலத்துக்கு முன் வெளிநாடு சென்றவர்களிடம் (குறிப்பாக சுவிஸ்வாழ் தமிழர்களிடம்) மட்டுமே கேட்க முடிகிறது

said...

அட :)

அப்பிடியே 'அவள்' ஐயும் போடுறது தானே.

கணிதம் படிக்க ஆர் வந்து மாட்டிச்சுதுவளோ :)

said...

புரியலையே சிகிரி. எவள்?

said...

நானும் ஒரு 'பேய்க்காய்' தெரியுமோ? அனா நீங்கள் சொல்லிற மாதிரிப் பாடங்களில இல்லை. பாடத்தில எண்டு பாத்தான தமிழும் சமயத்தையும் சொல்லலாம். கணக்கில அம்மாவும் அப்பாவும் புலிகளாம் எண்டு சொல்லிச்சொல்லியே என்னை வாட்டியெடுத்த வாத்திமார் (குறிப்பா என்ர சொந்தக்காரக் கிழடொண்டு) ஞாபகம் வருது. ஆனா உங்களப் போல 'கலந்து' படிக்கிற சந்தர்ப்பம் வரேலயே. சிலநேரங்களில நிம்மதியாவும் சிலநேரங்களில பொறாமையாகவும இருக்கு உந்தக் 'கலவன்' காரரைக் கண்டால்.
கையில அடிவாங்கேக்க அதிகம் நோகாமல் அடிவாங்கிற ரெக்னிக் இருக்கு. அதைப்பாவிச்சு கடசியில உது சரிவராதெண்டு பிட்டத்திலயே சாத்தத் தொடங்கீட்டாங்கள்.

said...

பாவை,
யாழ்ப்பாணத்தமிழ் பற்றின உங்கட பார்வை ஓரளவுக்கு ஒப்பானது. யாழிலிருந்து வன்னிக்குப்போய் இன்னும் திரும்பாத சனத்திட்டயும் பழைய யாழ்ப்பாணத்தமிழைப் பார்க்கலாம். நானும் வெளிநாட்டாரிட்டத்தான் பதினைஞ்சு வருசத்துக்கு முந்தின தமிழைக் கேட்டன். இதுபற்றி இங்கயும் இங்கயும் எழுதியிருக்கிறன்.

said...

வசந்தன்...

அது ஆரம்பப்பள்ளி.... கவவன்ல படிக்கிற சந்தர்ப்பம் ஐஞ்சாம் வகுப்பு வரை தான் கிடைச்சது... எனக்கெண்டா கொஞ்சமும் பிடிக்கிறேல

said...

//மூன்றும பெண் பிள்ளைகளாவே பிறந்து உணர்த்திட்டுது என்று சொல்லும் பிரேம்நாத் சேர்..//

ஓஹோ... நீங்களும் அவரிடம் தானா? பாடசாலையிலா அல்லது உருத்திரா மாவத்த ஒழுங்கையிலா? பெயருகளை கேட்டு தெரிஞ்சு வைச்சுக்கொண்டு கடைசி வரைக்கும் மறக்காமல் அவ்வப்போது சத்தம் போட்டு கூப்பிடுவார். அவர் தயவில் எங்கடை பேர் பொம்பிளைப்பிள்ளையளுக்கு தெரியவருதே என்ற ஒரு சந்தோசம் இருந்தாலும் பேரை மட்டும் தானே தெரிஞ்சு கொள்ளுவினம் ஆரெண்டு தெரியாதே என்ற கவலையுமு் இருக்கும்.

எண்டாலும் அவர் ஒருக்கா.. சயந்தன் நீ பொலிவுக்கு தானே க்ளாசுக்கு வாறனி எண்டு சொன்ன போது.. நல்ல வேளை.. முன்னாலை இருக்கிற பொம்பிளைப்பிள்ளையளுக்கு பெயர் மட்டும் தான் தெரியும் என்ற சந்தோசம்..

Anonymous said...

நல்லாயிருக்கடா உங்கட விளையாட்டு.
இன்னும் எத்தினபேரில வந்து அலட்டப்போறாய்?

said...

ஒழுங்கையில எல்லாம் படிப்பிக்கிறாங்களா சயந்தன்? :-)
அவர் படிப்பிச்ச பாடசாலையில் படிக்கேல.
ம்..ம்.. அவரால் கூப்பிடப்படுகிற எங்கட பெடியள் சந்தோஷமாக அலுத்துக்கிறதன் காரணம் இப்பத்தானே புரியுது.


அனானி...

ஆரம்பிச்ச இதையே எப்பிடிக் கொண்டு போகப் போறனென்று தெரியேல. இதில பல பேரில வந்து அலட்டுறது எப்பிடி?

said...

நவமணி,வள்ளி தங்கப்பா? கேம்பிரிட்ஜ் ரியூசனில் படித்தீர்களா? எந்த ஆண்டு?
உங்கள் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன தொடர்ந்து எழுதுங்கள்.முடிந்தால் எனக்கு ஒரு மின்னஞ்சல் eelanathan at yahoo.com

said...

ஆமாம்... ஈழநாதன்.

ஆண்டெல்லாம் வேண்டாமே..
என்றாலும் உங்களை நன்றாக அறிவேன்.

இப்பவெல்லாம் நீங்கள் எதுவும் எழுதுவதில்லையா?