பனைமரக் காடுகளுக்கு விடை கொடுத்த பின் கட்டடக் காட்டுக்குள் வாழ்ந்த காலமும் போக இன்று தென்னை மரங்கள் சூழ ஒரு அழகிய சூழலில் வாழ்க்கை...
மறந்து போன செண்பகம், பல காலம் காணக் கிடைக்காத கிளி, அணில், சிட்டுக்குருவி, இதமான காற்று எல்லாமே நீண்ட காலத்தின் பின்...
இதுவும் நீடிக்கப் போவதில்லை.. கொஞ்சம் கொஞ்சமாக கட்டடங்களாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தப் பிரதேசமும்.....
ஒரு மயக்கும் மாலை நேரத்தில் இலங்கையின் சுற்றாலாத் தலங்களில் ஒன்றான Mount Lavania Beach நோக்கி என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி..
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி... காரணம் ஏன் தோழி.
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பதும் ஏன் தோழி... காண்பதும் ஏன் தோழி
மணம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி...
பறந்துவிட்டார் தோழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்
8 comments:
//என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்...//
மொட்டை மாடியில் இருந்து எடுத்தாலும் பார்த்து எடுக்கவும், ஏனெண்டால் அவசரகால சட்டத்தில அவசரமா பிடிச்சு 'மொட்டை' போட்டிடுவினம்.
படங்கள் நன்றாக இருக்கின்றன. கொஞ்சம் post-process செய்தால் இன்னும் நல்லாவரும்...
வாழ்த்துக்கள்...!
ஆமாம்.. அதெண்டா உண்மை தான்...
மொட்டையாக கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியல... :)
Edit பண்ணாமல், எடுத்த மாதிரியே போட்டிருக்கிறேன்.. இல்லையெண்டால் (நல்லாயிருந்தால்) edit பண்ணித் தான் நல்லாயிருக்கு... உனக்கு எங்கே எடுக்கத் தெரியும் என்று சொல்லிடுவாங்க.. :(
அதோட இது தான் விரும்பி எடுத்த முதல் முயற்சி.. இனி மேல் பார்ப்போம்..
நான் 'மொட்டை' எண்டது, கழுத்தோட மொட்டை...
//edit பண்ணித் தான் நல்லாயிருக்கு... உனக்கு எங்கே எடுக்கத் தெரியும் என்று சொல்லிடுவாங்க.. //
அதுவும் சரி...
//இனி மேல் பார்ப்போம்..//
நீங்க எடுக்க பாருங்க... நாங்க முடிஞ்சா பாக்கிறம்... ;)
உண்மைதான்.... மனது மயங்கும் மாலைப்பொழுது.. வீட்டி மொட்டை மாடி , கடற்கரைக்காற்று..... நினைக்கவே கிறங்கடிக்கின்றது.... மனதின் எங்கோ ஓர் மூலையில் மறைந்திருந்த நினைவுகளை மலரச் செய்துள்ளீர்கள்...
மறந்து போன செண்பகம், பல காலம் காணக் கிடைக்காத கிளி, அணில், சிட்டுக்குருவி, இதமான காற்று
காலத்தின் மாற்றத்தால் இந்த அழகிய காட்சி கூட மாறிப்போகலாம்.....
நினைவுகளை அழிக்க முடியுமா.....
நீங்கள் எழுதுங்கள் (எடுங்கள.) ... நாங்கள் பார்க்கின்றோம்....
வாழ்த்துக்கள்...!
நன்றி Shayanth.. கடற்கரைக் காற்று அவ்வளவாக வருவதில்லை... கொஞ்சம் தொலைவு... அதனால் தான் "கடற்கரையை நோக்கி" என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இருந்தாலும் மாலை வேளைகளில் கிறங்கடிக்கும் சூழல் தான்..
வருகைக்கும் ஊக்கப்படுத்தலுக்கும் நன்றி..
தற்செயலாக உங்களது Blog'ஐ பார்க்க கிடைத்தது. துணிச்சலுக்கும், தமிழுக்கும் பாராட்டுக்கள்.
படங்கள் அழகாக இருக்கின்றன.
பொருத்தமான பாடல்...
//தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்//
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகளில் ஒன்று...
வழ்த்துக்கள்...
தற்செயலாக உங்களது Blog'ஐ பார்க்க கிடைத்தது. துணிச்சலுக்கும், தமிழுக்கும் பாராட்டுக்கள்.
படங்கள் அழகாக இருக்கின்றன.
பொருத்தமான பாடல்...
//தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்//
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகளில் ஒன்று...
வாழ்த்துக்கள்...
கொழும்புக்கு வந்தா ஒருக்கா உங்கட வீட்டு மொட்டைமாடிக்கு வரவேணும்.
Post a Comment