Sunday, October 07, 2007

காண்பது கனவா... நனவா?

ஓரிரு வாரங்களுக்கு முன் சக்தியில் Duet படம் போட்ட அன்று தான் முதன் முதலாக கவனித்தேன்... படத்தின் காட்சிகள் அடிக்கடி மறைக்கப்பட்ட அதே வேளை ஒலி மட்டும் சீராக கேட்டது.

சன் ரீ.வீயில் இருந்து பதிவு செய்யும் போது ஏதும் தவறு நடந்து விட்டதோ என்று முதலில் நினைத்தாலும் பின்னரும் அடிக்கடி காட்சிகள் மறைக்கப்பட ஒன்றும் புரியாமல் விழித்தேன்.. இன்று தான் அதற்கான விடை
கிடைத்தது...

இன்று ஒளிபரப்பான திரைப்படத்திலும் அவ்வாறு பல காட்சிகள் மறைக்கப்பட்டன, கீழே இந்த வாசகத்துடன்...
"This is due to Government Regulation on Tobacco and Alcohol"

Polythene பாவனையைத் தடை செய்த மகிந்த அரசாங்கம் இதற்கான தடையையும் கடந்த வருடம் மார்கழி முதலாம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வந்தது..

புகைத்தல் மற்றும் மதுபானம் குறித்த விளம்பரங்களை ஊடகங்களின் மூலமோ சுவரொட்டிகள் விளம்பர பதாதைகளின் மூலமோ விளம்பரம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு வருடமாகும் நிலையில் இப்போது தான் தொலைக்காட்சியில் காட்சிகள் மறைக்கப்படுகின்றன.
கொண்ட நோக்கம் இதன் மூலம் அடையப்படுமா என்ற சந்தேகம் இருக்கின்ற போதும் படம் பார்க்கும் போது எரிச்சலைக் கிளப்புகின்ற போதும் இதனை முழுமையாக வரவேற்கிறேன்..

பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்

இவையும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் முழுமையாக செயற்படுவதாக தெரியவில்லை...

எப்போதும் போல, பொது இடங்களில் புகைப் பிடிக்கிறார்கள்.. .. புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் ஒட்டப்பட்ட நிலையில் Bus ஓட்டுநரே புகைப்பிடிப்பதை இப்போதும் காண முடிகிறது.

புகைப் பிடிக்காதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த செயற்பாட்டை நிறுத்தும் வகையில் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.. பார்ப்போம்..

4 comments:

said...

// பொது இடங்களில் புகைத்தல் மற்றும் மதுபாவனையில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாக காணப்படின் அவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத அபராதம் ஒரு ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் வழங்கப்படும்

இவையும் அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் இன்னமும் முழுமையாக செயற்படுவதாக தெரியவில்லை...//

மறுக்கமுடியாத உண்மை . . .

அதுசரி நாளைக்கு Examஎல்லோ :((

said...

ஆமா... அதனால தான் நேரம் கிடைக்குது... வீட்டிலிருப்பதால். ;)

said...

இந்த புது templete நன்றாக இருக்கிறது...

மற்றபடி புகைபிடிக்கிறத பற்றி எனக்கு ஒண்டும் தெரியாது...!!

said...

நல்லா சொல்லுங்கோ ஆனால்; நாங்கள் திருந்தமாட்டம் என்பது நீண்ட காலமாக இலங்கையில் இருக்கிற பழக்கம்தானே…?…