Sunday, October 30, 2005

இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி?

இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...

இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)
எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.

8 comments:

Anonymous said...

Same email been sent to all Indians replacing the word "Srilankan" by the word "Indian".

Missed Point :

* Suddenly make a copy of this posting and forward it to all the fellow srilankans/indians.

Anonymous said...

appuram puli romba pidikum.

Anonymous said...

pavai do me a favour

go and help your mon don't waste the time here

this for indians not for srilankan
or may be its for your family

said...

இந்தியதமிழர் வேறுவிதமாக செய்வார்களா? எல்லம் ஒரே குட்டை ஒரே மட்டை, அதுசரி இது உங்க அனுபவமா?

said...

//தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.//


அட இது சூப்பர். இது ஏதோ இலங்கை தமிழர்கள் மட்டும்தான் செய்யிறாங்களா? :-)) இந்த உலகத்தில எல்லாமொழிகாரர்களுக்கும் அடுத்தவர்களுடைய கதை கதைக்க ரொம்ப பிடிக்கும்.எனக்கும்தான்.:-)) இது மனித இயல்பு...

Anonymous said...

This is 100%original SRILANKAN PANAGKOTAI THAMILAN'S Life style specialy only in CANADA & ENGLAND.Not other EUROPEAN Countries.

Anonymous said...

இலங்கைத்தமிழர்களுக்கு மட்டுமில்லை, எல்லா இனத்தவ மனிதர்களுக்குமே பொருத்தமாகத்தான் இருக்கின்றது

said...

நீங்கள் சொன்னதிலை கனக்க எனக்குப் பொருந்தாது. அப்ப நான் இலங்கையைச் சேர்ந்தவள் இல்லையா...? ஒருக்கா அப்பா அம்மாட்டைக் கேட்டு நதிமூலம் தெரிஞ்சுகொள்ளோணும் :)