நான் கல்வி கற்குமிடத்தில் maintenance க்காக மின்சாரத்தை நிறுத்தி மாற்று ஏற்பாட்டினூடாக மின்சாரத்தை வழங்கப்போவதாகவும் அதனால் ஓரிரு நிமிடங்கள் தடை ஏற்படுமெனவும் அறிவித்ததை தொடர்ந்து வழமையை விட கொஞ்சம் முதலே மதிய உணவுக்கான இடைவேளை தரப்பட்டது.
கெதியாக வீட்டை போகோணும் என்று மதியத்துடன் வகுப்புக்கு கள்ளம் போட்டு அவசர அவசரமாக வெளிக்கிட்டு Lift க்கு வந்த எனக்கும் மதிய உணவுக்காக வெளியே செல்ல வந்தவர்களுக்கும் அது மறந்து போச்சோ இல்லை மின்சாரம் நிற்க முதல் போயிடுவோமென்று நினைச்சமோ என்னமோ Lift க்குள்ள போயிட்டம்.. போக வேண்டிய தளத்துக்கான பொத்தான் வேலை செய்யவில்லை. என்னடா என்று பார்த்து கொண்டிருக்க மின்சாரம் போயிட்டுது... மீண்டும் மாற்று ஏற்பாட்டின் மூலம் மின்சாரம் வர திரும்பவும் பொத்தானை அழுத்த கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வேலை செய்திச்சு. ஆனால் நாங்கள் 12 வது தளத்தில நிற்க அது Basement ஐ காட்டுது.. கொஞ்ச நேரம் என்ன செய்யிறதெண்டே தெரியேல.. Lift மேலே/கீழே போவதாக தோன்றவில்லை... திறக்கவும் முடியவில்லை.. எல்லார் முகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெரிஞ்ச மாதிரி இருந்திச்சு.
6, 7 பேர் நிண்டதால கொஞ்சம் கலகலப்பாக கதைச்சு பயத்தை வெளிக்காட்டாம நிண்டாங்கள். தனிய அல்லது தெரியாதவங்களோட நிண்டிருந்தா பயந்திருப்பன். எல்லாரும் எங்க பெடியன்கள் தானே ;-) என்று அவங்கட கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமா Lift அசையிறதை உணர முடிஞ்சுது எண்டாலும் மேலேயா கீழேயா போகுது என்று உணர முடியவில்லை.
ஒருத்தன் "மச்சான் நாங்கள்.. 12 இல நிற்கிறம்.. இது basement காட்டுது.. அப்ப basement க்குப் போய் கீழே போகப்போறம் போல" என்றும்... இன்னொருத்தன் தான் ஏதோ Cartoon இல பார்த்த மாதிரி மேலால உடைச்சுக் கொண்டு போகப்போறன்" எனறும் எல்லாத்துக்கும் மேலே மற்றவன் காலையில் படித்த Micro Controller Programming ஐ வைச்சு Lift எப்பிடி இயங்குது என்றும் விளக்கிக் கொண்டிருக்க Lift ஒரு மாதிரி Basement இல் போய் நிண்டிச்சு...
அதில இறங்கி ground க்கு வந்திருக்கலாம். மீண்டும் "G" and "9" அழுத்திட்டு நிண்டம்.. எங்கையும் நிற்காம மீண்டும் பயணம்..ஆனால் முதலில் Basement இல் நிண்டதால எங்கையாவது நிற்குமென்று நம்பி பயமில்லாமல் நிண்டம்.. இந்த முறை வானத்தல பறக்கப் போறம் போல என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டிருக்க 18ல் (அது தான் கடைசித் தளம்) நிண்டிச்சு..
எனக்கு இறங்கி படிக்கட்டால போவோமோ என்று தோன்றிச்சு.. இருந்தாலும் எப்பிடி அத்தனை படிகளைக் கடப்பது என்ற அலுப்பிலும் எல்லாரும் நிற்க நான் மட்டும் இறங்க நோண்டி என்றும் பேசாம நிண்டன் என்ன தான் நடக்குது பார்ப்போமே என்று,..
இந்த முறை இலக்கங்கள் ஒழுங்காக மாறி 12 ல் வந்து நிண்டிச்சு.. எங்களை வழி அனுப்பி வைச்ச சிலர் (Basement காட்டுது என்று சொல்லி ஏறாமல் விட்டவர்கள்) மற்ற Lift களில் சென்று விட சிலர் நிண்டார்கள்... எங்களைக் கண்டவுடனே சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு... அதில அந்தத் தளமே அதிர்ந்திச்சுது... உண்மையாத்தான்... :">
அப்ப ஒருத்தன் சொன்னான்.. "மச்சான்... அப்பே கட்டிய program கரன்ன அதி" (எங்கட ஆக்கள் தான் program செய்திருப்பாங்கள் போல...) தங்கட ஆக்களின் திறமையில அப்பிடி ஒரு நம்பிக்கை.. he he...
இடைநடுவே Lift நிற்பது வேற.. இது மேலேயும் கீழேயும் மாறி மாறி பயணம்.. Lift இல் விண்வெளிக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு எனக்கு...